1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (15:17 IST)

மகரம்: மார்கழி மாத ராசி பலன்கள்

உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: ராசியில் குரு - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் - பஞ்சம  ஸ்தானத்தில்  ராஹூ  - லாப  ஸ்தானத்தில் கேது, சுக்ரன்   - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
 
26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் ராசிக்கு மாறுகிறார். 
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார். 
06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
இந்த மாதம் பிரயாணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக  இருக்கும். வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும்.  எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய  வேண்டி இருக்கும். ஆனாலும் குரு தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால்  வாகன லாபம் ஏற்படும்.  எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள்  நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி  செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
 
தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து  வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.  உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி  காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு   ஏற்படும். 
 
பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும்.  எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். 
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
 
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன்  வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.
 
உத்திராடம்:
இந்த மாதம்  ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.   மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
 
திருவோணம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும்.  பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை  அனுசரித்து செல்வது நல்லது. 
 
அவிட்டம்:
இந்த மாதம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது  அவசியம். பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும்.  
 
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான  பணிகள் எளிதாக முடியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 3, 4
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 27, 28.